“மதினா நகருக்குப் போக வேண்டும் என் மன்னர் முஹம்மதை காண வேண்டும்”
என்ற அந்த பாடல் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
யாரை படைக்கவில்லையென்றால் இவ்வுலகத்தை படைத்திருக்க மாட்டேன் என்று வல்ல இறையோன் கூறினானோ? யாருடைய பெயரை அவன் தனது அர்ஷில் தீட்டி வைத்திருந்தானோ அந்த மகத்துவம் அடங்கிய மாமன்னர் எம்பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காணற்கறிய இந்த ரவ்லாவினை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.
இதைக் கொண்டு அவர்க்ளின் காதல் கிடைத்தால் அதுவே எனக்கு போதுமானதாகும்.
சொல்லுங்கள்
சொல்லுங்கள் ஸல்லலாஹு அலா முஹம்மது ஸலவாத்தை சொல்வீர்களே நபி பேரிலே….
என்று உங்களை வேண்டியவனாய் என்னுரையை நிறைவு செய்கின்றேன்.
அன்புடன்,
பாவைப் பிரியன்.( அபுல் கலாம் ஆசாத் ராஜா சுபூரி)
Posted in Uncategorized | 2 Comments »
இளம் வயதில்
அம்மாவிடம் அழுதுபுரண்டு
காசு வாங்கி தம்பியோடு
ஏசு வாங்கி கடைக்கு சென்று
கடலை முட்டாய் வாங்கி
காக்காய் கடி கடித்த நியாபகம்!!!!
செல்லாத இந்த காசுகள்
சொல்லாத செய்திகள் எத்தனையோ?
நில்லாது செல்லும் வாழ்கையில்
நினைவுகள் மட்டும் (சில்லறை)
காசுகளை போல “கொள்ளென”
சிரிக்கின்றன..
நான் மட்டும் அழுகின்றேன்
மீண்டும் கடைக்கு போவலாம் என்று……
கண்ணீருடன் பாவைபிரியன்..
Posted in Uncategorized | Leave a Comment »
TripAdvisor™ TripWow ★ Olk26C6 Slideshow ★ to India, Thanjavur and Dubai. Stunning free travel slideshows on TripAdvisor
ஊடாகOlk26C6 Slideshow.
Posted in Uncategorized | Leave a Comment »
ஒலிநாடாவை பதிவு செய்யலாம் என முயற்ச்சித்தேன் முடியவில்லை அதனால் பாடல் வரிகளை படையலாக்குகிறேன்.
தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜியின் மனத்தை உருக்கும் பாடல் வரிகள்
ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே! அழைப்பவர் குரலை கேட்பவர் நீரே!
அழைக்கின்றோம் அதனால் ஆதரிப்பீரே! கதி யாரும் இல்லை நபி யாரசூலே! நபி யாரசூலே!
ஆதாரம் தாரும் அல்லாஹ்வின் நேசரே! அழைப்பவர் குரலை கேட்பவர் நீரே!
அழைக்கின்றோம் அதனால் ஆதரிப்பீரே! கதி யாரும் இல்லை நபி யாரசூலே! நபி யாரசூலே!
அண்ணலே உங்கள் உம்மதோர் என்னும் உரிமை கொண்டாடும் உவகையில் ஆழ்ந்தோம்!
உத்தமரே உமது நெறிமுறை கடந்தோம்! உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்!
உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்! உல்லாச வாழ்வில் அல்லாஹ்வை மறந்தோம்!
நில்லாது போவதை நிலையாக நினைத்தோம்! வல்லோனின் தூதரே வழிகாட்டுவீரே!
கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே!கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே
திருந்தாமல் வாழ்வில் தீமைகள் செய்தோம்! தீர்ப்புசொல்லும் நாளை தேடாமல் மறந்தோம்!
திரைநீங்கி உம்மை தெளிவாக்கும் அன்று பரிந்துரை செய்து துணைக்கரம் நீட்டும்!
நீரில்லை என்றால் அங்கு நிலை என்னவாகும் நெறிவாழும் மதினாபதி வாழும் நாதரே!
கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே! கதியாரும் இல்லை நபியாரசூலே! நபி யாரசூலே!
எண்ணத்தில் எல்லாம் தன்னலம் பார்த்தோம்! இன்பத்தை தீயோர் வழியினில் ரசித்தோம்!
இதயத்தை வீணோர் கரத்தினில் சேர்த்தோம்! எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம்! எல்லாம் தெரிந்தும் ஏட்டினில் வாழ்ந்தோம்! சொலாதபோது சுகத்தினில் ஆழ்ந்தோம்! பொல்லாத பாவதீயினில் வீழ்ந்தோம்! கதி யாரும் இல்லை நபி யாரசூலே!
Posted in Uncategorized | 1 Comment »
அறிவு பெறுவது என்றால் புதிதாக ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வது என்றே பலரும் நினைக்கின்றனர்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவு பற்றிக் கூறியிருக்கும் ஒரு கருத்து இதற்கு மாறாக இருக்கிறது.
‘அறிவு இறை நம்பிக்கையாளரின்
காணாமல் போன பொருளாகும்
எனவே அவர் அதை எங்கே கண்டாலும்
அதை அடையும் உரிமை அவருக்கு உண்டு’
என்பது அவர் வாக்கு (திர்மிதி, 1245) .
பெருமானாரின் இந்த வாக்கில் பல அரிய உண்மைகள் பொதிந்திருக்கின்றன.
அவை :
அறிவு நம்மிடம் இருந்த பொருள்; அது காணாமல் போய்விட்டது.
எனவே அதைத்தேடி அடைய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.
அறிவு சிலருக்கு மட்டுமே உரிமையானதல்ல; எல்லோருக்கும் உரிமையானது; சிறப்பாக , இறைநம்பிக்கையாளருக்கு உரிமையானது.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவு என்பது வெளியிலிருந்து மனித மூளைக்குள் திணிக்கப்படுவதில்லை.
அது ஏற்கனவே மனிதனுக்குள் இருக்கிறது. கல்வியின் வேலை அதை வெளியே கொண்டு வருவதாகும்.
‘கல்வி’ என்ற சொல்லின் மூலச்சொல் ‘கல்’. இதன் பொருள் தோண்டுதல்.
அதாவது கல்வி மனிதனுக்குள் இருக்கும் அறிவைத் தோண்டி வெளியே கொண்டு வருகிறது என்று பொருள்.
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப்போல, அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல், கற்கக் கற்க அறிவு ஊற்றெடுத்துப் பெருகும் என்கிறார் திருவள்ளுவர்.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’ – திருக்குறள் 396.
‘எஜூகேஷன்’ (Education) என்ற ஆங்கிலச் சொல்லின் மூலப்பொருளும் ‘தோண்டி வெளியே எடுத்தல்’ (To dig out) என்பதுதான்.
கல்வி, அறிவைக் குறிக்கும் ‘ இல்ம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘கண்டு பிடித்தல்’ என்ற பொருளுண்டு.
இந்தச் சொல்லும் ஏற்கனவே நம்மிடம் மறைந்திருப்பதை அல்லது நம்மிடமிருந்து காணாமல் போனதைக் கண்டுபிடித்தல் என்ற பொருளையே தருகிறது.
அறிவியலாரும் மறைந்திருக்கும் இயற்கையின் ரகசியங்களை அறியும்போது அதைக் ‘கண்டுபிடித்தல்’ (Discovery) என்றே கூறுவதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
‘அறிவு ஏற்கனவே மனிதனுக்குள் இருக்கிறது என்றால், அது எப்படி காணாமல் போனது?’ என்று கேட்கலாம்.
குர்ஆன் விவரிக்கும் ஆதாம்-ஏவாள் தொன்மத்தில் இதற்கான விளக்கம் இருக்கிறது.
இறைவன் ‘பூமியில் நான் என் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்’ என்று அவர்களிடம் (மலக்குகள்) கூறினான்;
அவர்கள், ‘ நாங்கள் உன் ஆணைகளைத் தட்டாமல் நிறைவேற்றுகிறவர்கள்; எந்நேரமும் உன்னையே துதித்துக் கொண்டிருப்பவர்கள் . அப்படியிருக்க எங்களை விட்டுவிட்டு பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தப் போகிறவர்களையா உன் பிரதிநிதி ஆக்கப் போகிறாய்?’ என்று கேட்டார்கள்.
இறைவன்,’ நீங்கள் அறியாததை நான் அறிவேன்’ என்று கூறி முதல் மனிதராகிய ஆதத்தைப் படைத்தான்.
அவருக்கு எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். இறைவன் அந்தப் பொருட்களை அமரர்களிடம் காட்டி, ‘இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்’ என்றான்.
அவற்றைப் பற்றி அறியாத அமரர்கள், ‘இறைவா! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாங்கள் அறியோம்’ என்றனர்.
இறைவன், ‘ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்குத் தெரிவிப்பீராக!’ என்றான்.
ஆதம் அப்பெயர்களைக் கூறினார். (குர்ஆன் 2: 30 – 33)
இதில் பெயர் என்று குறிப்பிடுவது வெறும் பெயர் மட்டுமல்ல.
பெயரைக் குறிப்பிடும் ‘இஸ்ம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘ஒரு பொருளின் உள்ளார்ந்த தன்மைகள்’ என்று பெயர்.
ஒரு பொருளின் பண்பு, இயக்கம் பற்றி அறியாமல் அதற்குப் பெயர் சூட்ட முடியாது.
எனவே இங்கே பெயர் என்பது ஒரு பொருளைப் பற்றிய முழுமையான அறிவு என்பது பொருள்படும்.
இதிலிருந்து இறைவன் எல்லாப் படைப்புகளையும் பற்றிய அறிவை ஆதத்துக்கு உணர்த்தினான் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதாவது படைக்கப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றினுடைய தன்மை, இயக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் மனிதனுக்குள் வைத்துவிட்டான் என்று பொருள்.
இந்த அறிவாற்றல் மனிதனுக்குள் மறைந்து கிடக்கிறது என்பதையே ‘அறிவு காணாமல் போன பொருள்’ என்ற பெருமானாரின் வாக்கு உணர்த்துகிறது.
இந்த அறிவுதான் கல்வியாலும் ஆராய்ச்சியாலும் தோண்டத் தோண்ட வெளிப்படுகிறது.
கூட்டத்தில் பலர் இருந்தாலும் நமக்குத் தெரிந்தவரையே நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம்.
படைப்புகளைப் பற்றி ஏற்கனவே உணர்த்தப்பட்டிருப்பதால்தான் மனிதன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
குழந்தைகள் ஒவ்வொரு பொருளையும் கூர்மையாக உற்றுப் பார்ப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
அந்தப் பொருளை இதற்கு முன் எங்கோ பார்த்ததுபோல் தோன்றுவதால்தான் குழந்தைகள் அப்படி பார்க்கின்றன.
விதைக்குள் மரம் ஒளிந்திருப்பதைப் போல் மனிதனுக்குள் அறிவு ஒளிந்திருக்கிறது.
அதாவது அறிவு ‘காணாமல்’ கிடக்கிறது.
விதையிலிருந்து மரம் முழு வடிவில் ‘சட்’டென்று தோன்றிவிடுவதில்லை.
அது முளை, இலை, அரும்பு, பூ, காய், கனி என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளிப்படுகிறது.
மனிதனுடைய அறிவும் அவ்வப்போதைய தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாகவே வெளிப்படுகிறது.
அறிவியலாரின் கண்டுபிடிப்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தேவைக்காகக் கண்டுபிடித்தது; மற்றொன்று எதற்காகவோ ஆராய்ச்சி செய்யப்போய் தற்செயலாகக் கண்டுபிடித்தது.
அறிவியலார் தற்செயலாகக் கண்டுபிடிப்பதும் மனிதனுக்குத் தேவை என்பதாலேயே இறைவன் அதை அப்படி வெளிப்படுத்துகிறான்.
‘எல்லாப் பொருள்களின் கருவூலங்களும் எம்மிடம் உள்ளன. ஆனால் அவற்றைக் குறிப்பிட்ட ஓர் அளவிலேயே நாம் இறக்கினோ’ (15: 21) என்று இறைவன் குர் ஆனில் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்து இறைவன் மனிதனுக்கு வேண்டியவற்றை, வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில் கொடுத்தருள்கிறான் என்பதை அறியலாம்.
‘காணாமல் போன பொருளை’ நாம் கண்டுபிடிக்கவும் இறைவனுடைய அருள் வேண்டும் என்பதையும் இந்த இறை உரை உணர்த்துகிறது.
இறைவன் மனிதனுக்குப் பெயர்களைக் கற்றுக் கொடுத்தான் என்பது மொழிகளை உண்டாக்கிப் பேசவும், எழுதவும், உதவும் ஆற்றலையும் இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கிறான் என்றும் பொருள்படும்.
அவனே அவனுக்கு மொழியைக் கற்றுக் கொடுத்தான் (55 : 4 )
அவன் எழுதுகோலால் கற்பித்தான் (96 : 5)
என்ற குர்-ஆன் வசனங்கள் இதையே தெரிவிக்கின்றன.
மொழியறிவு, எழுத்தறிவு என்பவையும் இறைவனால் உள்ளே மறைத்து வைக்கப்பட்டதால் இவையும் ‘காணாமல் போன பொருள்களே’.
இஸ்லாத்தில் பிற்காலத்தில் சிலர் கல்வியை மார்க்கக் கல்வி என்றும் உலகியல் கல்வி என்றும் பிரித்தனர். அதோடு நிற்காமல் உலகியல் கல்வி படிக்கத்தகாதது (ஹராம்) என்றும் தடுத்தனர்.
இறைவன் ஆதத்திற்கு படைப்புகளைப் பற்றிய அறிவை ஊட்டினான் எனக் கண்டோம்.
இதிலிருந்து முதல் மனிதருக்கு முதன் முதலாக போதிக்கப்பட்டது உலகியல் கல்வியே என்பதையும் , அதிலும் அந்தக் கல்வியை போதித்தவன் இறைவனே என்பதையும் அறியலாம்.
தன்னுடைய பிரதிநிதியாக இருந்து உலகத்தை ஆள மனிதனுக்கு உலகியல் கல்வி இன்றியமையாதது என்பதாலேயே இறைவன் இவ்வாறு செய்தான்.
‘காணாமல் போன பொருள்’ என்பதற்கு மூலத்தில் ‘ழால்லத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘பிராணி’ என்று பொருள்.
இது அரபிச் சூழலில் ஒட்டகத்தைக் குறிக்கும்.
இதன் மூலம் பாலைவனவாசிக்கு ஒட்டகம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு மனிதனுக்கு அறிவு அவசியம் என்று புரிந்து கொள்ளலாம்.
பாலைவனவாசிக்கு ஒட்டகம் வெறும் வாகனம் மட்டுமல்ல. அவனுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மூன்றையும் அதுவே தருகிறது.
அதுபோன்றே அறிவும், மனிதனுக்கு வாகனமாக இருக்கிறது. அவனுக்கு உணவு, உடை, உறையுள் மூன்றையும் தருகிறது.
ஒட்டகம் இல்லாமல் பாலைவனவாசி வாழ முடியாது.
அத்தைகய ஒட்டகம் காணாமல் போனால் அவன் எப்படி அதைத் தீவிரமாகத் தேடுவானோ அப்படி மனிதன் அறிவைத் தேடவேண்டும் என்பது குறிப்பு.
‘ழால்லத்’ என்ற சொல்லுக்கு ‘விடா முயற்சியுடன் தேட வேண்டிய பொருள்’ என்ற பொருள் உண்டு.
சில சமுதாயங்களில் உயர் வர்க்கத்தார் மட்டுமே கல்வி கற்கும் உரிமை பெற்றிருந்தனர்.
அடித்தட்டு மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது.
பெருமானுருடைய வாக்கோ அறிவைப் பெறுகிற உரிமை எல்லோருக்கும் உண்டு என்று கூறுகிறது. இது அக்காலத்தில் ஒரு புரட்சிகரமான கருத்தாகும்.
‘அறிவு, இறை நம்பிக்கையாளரின் காணாமல் போன பொருள்’ என்று பெருமானார் கூறியதற்கும் பொருள் உண்டு.
இறை நம்ம்பிக்கையாளரே அறிவு மனிதனுக்குள் மனிதனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற பேருண்மையை வேதங்களைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்வர்.
இறை நம்பிக்கை உறுதிப்பட அறிவு தேவை. எனவே அதற்காகவே இறை நம்பிக்கையாளர் அறிவைப் பெற வேண்டும்.
காணாமல் போன பொருள் கிடைக்குமா என்ற சந்தேகம் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படாது.
இறைவன் எப்படியும் அப்பொருளைக் கண்டடையச் செய்வான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அதனால் அப்பொருளைக் கண்டடையும்வரை அவர்கள் சோர்வு அடையாமல் விடா முயற்சி செய்வர்.
எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு, இறை நம்பிக்கையாளரிடம் பயன்படுவது போல மற்றவர்களிடம் பயன்படாது.
இறை நம்பிக்கையாளனே தான் பெற்ற அறிவை சக மனிதர், சக உயிர்களின் நன்மைக்குப் பயன்படுத்துவான்.
Posted in Uncategorized | Leave a Comment »
Posted in Uncategorized | Leave a Comment »
அபூ ஸாலிஹ் இப்னு மூஸா அன்பால் உண்டான நேசா!
மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது.
*ஜனனம்*
எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.
*ஜனனத்தின் மகத்துவம்*
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள்.
*கல்வி*
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள்.
*ஷைக்கின் சகவாசம்*
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள்.
*துறவு நிலை*
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள்.
*காதிரியா தரீக்காவின் உருவாக்கம்*
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள்.
*முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை*
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார்.
*அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்*
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள்.
*குடும்ப வாழ்க்கை*
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள்.
*மறைவு*
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!!
Posted in Uncategorized | 1 Comment »
Posted in Uncategorized | Leave a Comment »
மனிதனைப் பண்படுத்த உருவாக்கிய
மதங்கள் பெயரால் மனிதப் பந்தாட்டங்கள்!
அகந்தையை ஒழிக்க மதங்கள் பிறந்தன!
அகந்தை மிகுதியால் மனிதமே அழிந்தது!
முதலில் பிறந்தவன் சிறந்தவன் எனவே
இரண்டாமவனை கொல்லுதல் தகுமோ?
உடலில் ஓடும் குருதிகள் பிடித்து – முரட்டு
ஓநாய் போல குடித்தல் தகுமோ?
-கண்ணீருடன் பாவைப்பிரியன்.
Posted in Uncategorized | Leave a Comment »
Posted in Uncategorized | Leave a Comment »
The Blessed Places
The Green Dome of Rowdah tur Rasool (Sallallaho Alaihe Wasallam)

This mosque is located in the Wadi Shoaib which leads up from the Jordan Valley to the city of al-Salt just northwest of Amman in Jordan. The mosque is of modern construction and houses a refurbished Mazar of the prophet Shoaib Alaihissalam.

The Qabr-e-Anwar of Hazrat Prophet Shoaib (peace be upon him) in a room to the east of the main mosque and prayer area.

Muwajeh Sharif in Masjid Al Nabawi.

During late 90s, the Wahabi scholars in Masjid Al Nabawi changed the metallic calligraphy on these golden grills (Muwajeh sharif) and removed the word YA from Muhammad (Peace be upon him)
Mazar Mubarak of Hazrat Yahya (John) (Peace be upon him) within the Umayyad Mosque in Damascus. Some scholars report that it is only the head of Yahya (Alaihissalam) that was found when the mosque was being refurbished during the Umayyad period. Others claim that the head of Yahya (John) Peace be upon him, is housed in the crypt below a mosque in the old city of Sebastiya near Nablus, and still others claim the head was buried at Muwakir, site near the Jordan river.

Mazar of Hazrat Nooh (Noah) in Baqa’a Valley in Lebanon.
Some other scholars say that the Mazar of Hazrat Nooh can be in Jordan OR Lebanon OR Iraq. Allah knows the best.

The story of Hazrat Nooh (Noah) and the flood is found in a number of different passages in the Quran. Muslim scholars say that the Ark came to rest on Mount Judi and that Noah was buried nearby. Some claim that Hazrat Nooh founded a city called al-Thamanin ( i.e. “the Eighty) because there were 80 people on the Ark. Many scholars say that the first city founded by Hazrat Nooh, and where he was buried, was called “Karak.”

The Mazar of Hazrat Yousuf (Joseph) is located in the city of Nablus or Shechem. The older, Ottoman-era tomb was replaced by Israeli authorities, and the Israeli site was attacked by Palestinians during the Intifada.

This sign marks the Maqam (where he prayed) OR the Qabr-e-Anwar of the prophet Hud (Peace be upon him) in Damascus. It is located in the Qiblah wall of the Umayyad mosque in the center of the old city. Some older traditions claim that this is actually the Mazar of Hazrat Hud, that he was buried inside this wall when the mosque was constructed in the early Umayyad period. The mosque also contains a well which is called the “Well of Hud.” (Peace be upon him)

This black and white photograph was taken by W.H. Ingrams in the early twentieth century and published in the account of his travels to visit the tombs (Qabr) of Hazrat Salih (peace be upon him) and Hazrat Hud (peace be upon him) in the Hadhramawt. Ingrams reports that this tomb (Qabr) is 64 feet long. See: W.H. Ingrams, “Hadhramaut: A Journey to the Sei’ar Country and Through the Wadi Maseila,” Geographic Journal 88 (1936): 524-51, esp. p. 535.

According to some traditions, these are the Mazarat of brothers of Hazrat Yousuf (Joseph) (Peace be upon him). Only the main dome is now intact. Beneath it is a triple mihrab surrounded with Fatimid-style calligraphy and decoration. Some evidence of a burial site is extant just to the west of the dome. The site is located in the Southern Cemetery in Cairo just north of the Lu’lu’ Mosque.

Maqam Hazrat Salih in Sinai. According to some scholars, Hazrat Salih (Peace be upon him) stayed and prayed here.

The Mazar of Hazrat Salih (peace be upon him) is said to be located in Mada’in Salih, in Hijaz, or in the Hadhramawt. According to the local people in the Hadhramawt, Salih was the father of the prophet Hud, corresponding to the biblical Shelah father of Eber. Both Hud and Salih are said to have been giants, thus accounting for the extraordinary length of their tombs. According some scholars this is the Mazar of Hazrat Salih at Hasik.

The cave of Hazrat Loot (Lot) (Peace be upon him) is located just above the eastern edge of the Dead Sea. Some traditions refer to this cave as the burial place of Hazrat Loot (Lot).
The prophet Lot (Lut) is mentioned by name 27 times in the Quran in several long passages that relate how he was sent to the people of Sodom. The cities destroyed by God include Sodom, Zeboiyim [Sab'ah], Zoar [Sa'rah], Gomorrah [Amarah], and Admah [Duma]. Q 51:33-34 mentions stones of clay marked by God which were caused to rain down upon the people of Lot (Peace be upon him) as punishment for their sins.

The Mount Nebo (Jabal Nebo) in the mountains on the east side of the Jordan Valley opposite the city of Jericho. The site is also revered by Muslims as one of the possible places for the Mazar of Hazrat Musa (Moses) (Peace be upon him) also known as the “Red Mound” [Ar. al-kathib al-ahmar].

Mazar Hazrat Yusha’ bin Noon (Joshua b. Nun) (Peace be upon him) in the town of Zayy near the city of al-Salt in Jordan. The tomb itself is roughly 10 meters in length. Some scholars and travelers claim that this is actually the Mazar of the prophet Hosea [Ar. Hoshu'a] (Peace be upon him). Hazrat Prophet Joshua (Peace be upon him) is not mentioned by name in the Quran but Muslim scholars say that he is the “companion” of Hazrat Musa (peace be upon him) mentioned in the holy Qur’an (18:60-65) and he became prophet after Hazrat Musa (Peace be upon him). Scholars on the narratives in the Quran referring to the Israelites’ conquest of the Holy Land detail the stories associated with Joshua b. Nun. Ibn Kathir reports that Joshua was a great warrior and lived for 127 years.

Mazar Mubarak Hazrat Ayyub (Job) (Peace be upon him) in Salalah in the Dhofar region of eastern Oman

Mazar Mubarak Hazrat Ayyub (Job) (Peace be upon him) located on the hills overlooking the coastal city of Salalah in the Dhofar region of eastern Oman. The building containing the Mazar is surrounded by gardens, and the room itself is roughly 6 meters long.

The Mazar of Hazrat Imran is located in downtown Salalah in the Dhofar region of western Oman. Some believe that Hazrat Imran was a local Arab prophet, and others believe that the name is a reference to the father of Mary mother of Jesus (Peace be upon him) mention in the Quran, or the father of Hazrat Musa (Peace be upon him) mentioned in the Bible.

Mosque containing the Mazar of the prophet Aila (Peace be upon him) on the western slopes of the Lebanon mountains overlooking the Baqa’a Valley in Lebanon.

Some scholars believe that the prophet Idris (Peace be upon him) and prophet Seth (Peace be upon him) to have been buried in the two largest pyramids on the Giza plateau near Cairo. It is also said that Sabaians from Harran made pilgrimage to Giza and offered sacrifices there because they believed the pyramids were the Mazars of these two prophets.

These ruins used to be the palace of Queen Bilqis, the Queen of Sheba, perhaps one of those supposed to have been built by Prophet Sulaiman (Solomon) (Peace be upon him). These ruins are located on the eastern coast of Oman just west of Salalah in the Dhofar region. It is thought that these ruins are to be identified with the city of Abyssopolis mentioned by the classical Greek geographer Pliny. Arabic sources maintain the city was built by King Aziz II who ruled over the Hadramawt in the first century CE. The city is now named Sumhurum and was excavated a number of times, including by Wendell Philips and the American Foundation for the Study of Man in 1952

The Seal of Prophet Muhammad (Peace be upon him) in TopKapy Museum in Turkey

Mazar Mubarak Moazzin-e-Rasool, Hazrat Bilal Al Habashy (May Allah be pleased with him) in the Bab al-Saghir Cemetery to the south of the old city in Damascus, Syria.

Mazar of Hazrat Jafar Ibn Abi Talib (May Allah be pleased with him), the cousin of Prophet Muhammad (peace be upon him) near the city of Mu’tah in southern Jordan.

Mazar of Hazrat Hafsa (May Allah be pleased with her) in the Bab al-Saghir Cemetery south of the old city of Damascus.

Mosque of Imam Husain (May Allah be pleased with him) in central Cairo. According to one narration, the head of Imam Hussain was brought here from Karbala and buried here.

According to some Muslim sources, the head of Imam Husain (May Allah be pleased with him) was discovered in Asqalan (Ashkelon) and brought to Cairo where a mosque and Mazar was built to house it.

Sayyida Zaynab (Salamullah- e-Alaiha) Mosque in Cairo, Egypt

Mazar of Hazrat Sayyida Zaynab (May Allah be pleased with her) in Cairo, Egypt.

Mazar and Mosque of Hazrat Nafisa binte Hassan (May Allah be pleased with her) in Cairo, Egypt

A scene of Jannatul Muallh in Makkah before the demolishing by the Wahabi revolution in Saudi Arabia.

Mazar Hazrat Nafisa binte Hassan (May Allah be pleased with her) in Cairo

Mountain where Ameer ul Mo’mineen Imam Ali b. Abi Talib (May Allah be pleased with him) and Hazrat Ameer Muawiyyah (May Allah be pleased with him) met to adjudicate an end to their armed conflict over the right to the Caliphate. Located in southern area, near Mutah, of the Hashemite Kingdom of Jordan.

Mazar of great Sufi Shaikh-e-Akbar Hazrat Muhyyuddin Ibn Arabi encased in glass in the lower level of a mosque at the bottom of Mount Qasyun in Damascus. There are Mazarat of other Aulia Allah.

This is the Mazar of the mother of Hazrat Bahauddin Naqshband (May Allah’s mercy upon him) located just to the north of the large complex of Mazarat associated with Hazrat Bahaudddin Naqshbandi. Nearby this Mazar is a tree said to be grown from one of the round beads taken from Hazrat Bahauddin’s prayer beads that he brought back from his pilgrimage to Makkah. Also nearby is a reconstruction of the house where it is said that Hazrat Bahauddin grew up with his mother.

Portion of this vast graveyard said to be where close to 10,000 people were buried, among them many of the companions of Prophet Muhammad (Peace be upon him) sent into battle by the Caliph Hazrat Abu Bakr us Siddiq (May Allah be pleased with him) in 633 CE to fight against the false prophets such as Musailma Kazzab and Ansi, etc. This is near Fujaira, in the United Arab Emirates.

Mosque housing the Mazar of Hazrat Abu Ubaydah Ibn Jarah (May Allah be pleased with him) in the town of Abu Ubaydah in the Jordan valley just East of the Jordan River.

Mazar of Hazrat Imam Bukhari (May Allah’s blessings’ upon him) located inside of the large courtyard of the main shrine complex in Bukhara.

The Qabr (grave) of Hazrat Imam Bukhari (May Allah’s blessings upon him) is part of a completely refurbished shrine just outside of the city of Bukhara. Imam Bukhari is best known for his authoritative collection of the sayings (Hadith) of the prophet Muhammad (Peace be upon him), but also authored other works on the prophet Muhammad (Peace be upon him) and the transmission of his sayings including a large biographical dictionary of the transmitters mentioned in his hadith collection.

Mazar Hazrat Imam Al Shafi’i (May Allah be pleased with him) in Cairo.

The outside view of the Mazar of Hazrat Imam Al-Shafi’i (May Allah be pleased with him) in the Shafi’i Mosque in Cairo.

Mazar of Hazrat Qadi Iyyad (May Allah be pleased with him), a prominent Maliki jurist whose body was moved to Marrakech from its original resting place in Spain.

Prophet Muhammad’s (peace be upon him) birthplace in Makkah. Saudi government converted the place into a Library. Recently, Saudi’s has announced that they will be demolishing this holy site and replacing it with a high rise hotel / shopping centre.

The footprints of Hazrat Ibrahim (Abraham) (Peace be upon him) inside Maqam-e-Ibrahim in Makkah.

Entrance to the Mazar of Hazrat Qadi Iyyad (May Allah be pleased with him) in Marrakech

This rock holds 14 camel-hoof-shaped prints supposed to have been left by the she-camel of Hazrat Prophet Salih (Peace be upon him), and two marks apparently made by Hazrat Salih’s rod.

The rock on the left has been preserved in this Museum in Salalah, Oman. This building is located in downtown Salalah in the Dhofar region of eastern Oman.

Mosque housing the Mazar of Hazrat Sayyid al-Badawi in Tanta, in the Delta region of northern Egypt. There is also a chamber that houses the two footprints of the prophet Muhammad (Peace be upon him) preserved on a single black stone.

A very old photograph of Masjid Al Nabawi in Madinah

This is the cave of Uhad. Prophet Muhammad (peace be upon him) prayed and took some rest here during the battle of Uhad. Some Saudi fanatics are now destroying this cave.

Maqam-e-Ibrahim used to be under this shed. This has been now removed in order to make room for Tawaf of Ka’ba.

In Topkapy museum, Turkey, this box contains the soil from the Qabr-e-Anwar (grave) of Prophet Muhammad (peace be upon him).

An old photograph of Ka’ba. Ordinary people used to have access to the inside of Ka’ba but now it is available to only Kings and highly connected government officials

A Very old door of Ka’ba in Topkapy Museum

Jade casket of King Timur surrounded by members of his family and other prominent figures from Timurid rule in Central Asia. The Qabr is housed in the Bibi Khan mosque in Samarqand.

The gushing water of Zam Zam. People do not have access to this site any more.

An old photograph of the city of Makkah. On the right was the house of Hazrat Abdullah and Hazrat Aminah where Prophet Muhammad (peace be upon him) was born.

The sacred mantle of Hazrat Imam Hussain (May Allah be pleased with him) with his sacred blood when he was martyred in Karbala. This mantle is in Topkapy museum, Turkey.

Posted in Uncategorized | Leave a Comment »
முபாரக்கான மகத்துவம் பொருந்திய ரவ்லாக்கள்
நபிமார்களின் ஷபாஅத்து பெற்றால் ஆன்மாவுக்கு சுகம். எவருக்கும் இதிலே சந்தேகம் வேண்டாம், ஏற்றுக்கொண்டோற்கே ஜெயம்.
Posted in Uncategorized | Leave a Comment »
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சுபுஹான மெளலிதில் தவறில்லை !பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது!
அன்பிற்குரிய இஸ்லாமியர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சார்ந்த அதன் தலைவர் பி.ஜைனுலாபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.
அதில் பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு ஆரம்ப முதலே நடந்து கொண்டனர் என்பதையும் அனைவரும் அறிவர். அதை அறியாதவர்கள் இரு தரப்பினரிடமும் உள்ள அந்த CDயை பெற்று பார்த்துக்கொள்ளலாம்.
முதலில் மெளலிது பற்றிய விவாதம் நடைபெற்றது. சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையிலான அணி விவாதத்தை தொடங்கியது.
பி.ஜைனுலாபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு மற்றும் இஸ்லாம் அடிப்படைக்கல்வி என்ற நூற்களை அடிப்படையாக வைத்து, அந்த புத்தகங்களிலிருந்து சில கருத்துக்களை சொல்லி, சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை கையில்வைத்துக்கொண்டு இப்போது உள்ள மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று ஒரு கேள்வியை முதலில் வைத்தது. ஒப்பந்தப்படி இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னென்ன தவறு சுபுஹான மெளலிதில் இருக்கிறது என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி சொல்லி, பிறகு சாகுல் ஹமிது மெளலிதில் உள்ள பெரிய பொண்ணு சிறிய பொண்ணு சம்பந்தமான கேள்வியை கேட்டிருக்க வேண்டும். ஏன் என்றால் சுன்னத் ஜமாஅத் அறிஞர் மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று கேள்வி கேட்கும்போது கையில் எடுத்து காட்டிய புத்தகம் “சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு” எனவே அதிலிருந்து கருத்துக்களை எடுத்துவைத்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, பி.ஜைனுலாபிதீன் எழுதிய புக்கிற்கு தனியாக விவாதம் வைப்போம், நாங்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில் சொல்லுங்கள் என்று தன் அணிக்கே உரித்தான அகங்காரத்தோடு பதில் சொன்னது தவ்ஹீது ஜமாஅத் அணி.
விவாதம் நடைபெறும் இடத்தில் இரு அணியினரும் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கடமைபட்டவர்கள் என்ற சிறிய அறிவுகூட TNTJ அணியினருக்கு இல்லாததுதான் இந்த அகங்காரத்திற்கு காரணம்.
முதலில் அவர்கள் கேள்வி கேட்டு, பதில் சொல்லும் நிலையில் நாம் இருப்பதா ? இது நம்முடைய கவுரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கல்லவா ? என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான அணி கருதியிருந்தால், டாஸ் வென்ற அணி பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணிதானே, விவாதத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே, சுன்னத் ஜமாஅத் அணியினரைப்பார்த்து விவாதத்தைத்தொடங்குங்கள் என்று ஏன் வேண்டுகோள்விடுக்க வேண்டும் ?
பி.ஜைனுலாபிதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வைத்து கேள்வி கேட்டிருந்தால், பி.ஜைனுலாபிதீன் புத்தகங்களுக்கு தனியாக விவாதம் வைப்போம் என்று சொல்வதில் நியாயம் உண்டு. விவாதத்தில் தலைப்புக்குட்பட்ட புத்தகம் “சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு” பி.ஜைனுலாபிதீன் எழுதிய இந்த புத்தகத்தில்தானே இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மெளலிதில் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் எந்த செயலுக்குமே அடிப்படை கல்வி வேண்டும் அந்த அடிப்படையில் எடுத்த புத்தகம் “இஸ்லாம் அடிப்படைக்கல்வி” இதுவும் பி.ஜைனுலாபிதீன் என்பவரால் எழுதப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை வைத்துத்தானே செயல்பட முடியும்.
தவ்ஹீத் ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது போலும். கடைசிவரை இதற்கு பதில் சொல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, கோபம் பீறிட்டு முகமெல்லாம் வெளிறிப்போய்விட்டதை அவர்கள் வெளியிட்ட CD யில் தெளிவாக பார்க்க முடிந்தது. சுன்னத் ஜமாஅத் தன் விவாதத்தை சுபுஹான மெளலிதில் தொடங்கியது இதை கண்டுகொள்ளாத தவ்ஹீது ஜமாஅத் சாகுல் ஹமீது மெளலிதில் கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடைசி வரை சுபுஹான மெளலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை. இந்த விவாதத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் வாய்சவாடல் நன்றாக வெளிப்பட்டது.
தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஓதப்படும் சுபுஹான மெளலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத், கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓதப்படும் சாகுல் ஹமீது மெளலிதில் உள்ள கருத்தை எடுத்து வைத்து தோல்வியை சந்தித்தது.
ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் இல்லாமல் விவாதத்தில் உளறி, தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்களுக்கு “அரபி மொழி தெரியாது” என்று அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீனே “சுன்னத் ஜமாஅத்” அறிஞர்களிடம் அன்றைய தினம் நடைப்பெற்ற இரண்டாவது தலைப்பில் நடந்த விவாதத்தில் வாக்குமூலம் கொடுத்தார். சுன்னத் ஜமாஅத் அணி முன்னிலையில், தன் அணியான தவ்ஹீத் ஜமாஅத் அணியினரை கேவலப்படுத்த இதைவிட வேறு வார்த்தை அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனுக்கு கிடைக்கப்போவது இல்லை. அந்த அவலத்தையும் CD யில் பார்க்கமுடிகிறது. ஒரு வேலை இது பி.ஜெய்னுலாபிதீன் அவர்களால் ஆய்வு செய்து, அறிவுப்பூர்வமாக முடிவு செய்து உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவோம் என்று நினைத்துக்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கலாம்.
15 அல்லது 20 வருடங்களாக சுபுஹான மெளலிதில் தவறு இருக்கிறது, அதை ஓதுவது “ஷிர்க்” என்றெல்லாம் மேடைதோறும் முழங்கி வந்த தவ்ஹீது ஜமாஅத், அதை கிண்டலடித்து பிழைப்பு நடத்திய தவ்ஹீது ஜமாஅத், இதனை குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலம் எதிர்க்க முடியாமல் அப்துல் ரஹ்மான் பிர்தெளஸி(தவ்ஹீது ஜமாஅத்தின் காமெடி நடிகர்) என்ற சினிமா பைத்தியம் பிடித்தவரைக்கொண்டு சுபுஹான மெளலிதுக்கு சினிமா பாட்டு ராகம் அமைத்துக்கொடுத்து தவ்ஹீது மேடைகளிலே பாட வைத்த தவ்ஹீது ஜமாஅத் மெளலிது பற்றிய விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சுபுஹான மெளலிதை நினைவுபடுத்தியும்கூட தவ்ஹீது ஜமாஅத்தால், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுபுஹான மெளலிதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தது ஏன் ? “ஷிர்க்” என்ற பெருங்குற்றத்தை சுபுஹான மெளலிது மீது சுமத்திய தவ்ஹீது ஜமாஅத், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுட்டிக்காட்ட பயந்து கேவலப்பட்டு போனது ஏன் ?
மார்க்க அறிவு இல்லாத மாட்டு மந்தை கூட்டம் போல கூடியிருக்கும் கூட்டங்களில் சுபுஹான மெளலிதைப்பற்றி பேசி, இதெல்லாம் “ஷிர்க்” அல்லவா ? இது கூடுமா ? இது மார்க்கத்தில் உண்டா ? என்றெல்லாம் அறியாதவர்கள் மத்தியில் வீர வசனம் பேசிய தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், சுபுஹான மெளலிதை ஆய்வு செய்து “சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு” என்று புத்தகமே வெளியிட்ட பி.ஜெய்னுலாபிதீன், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் முன்னிலையிலே, மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? நேரடியாக விவாதத்தில் கேட்ட சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலே, இரு தரப்பைச்சேர்ந்த மக்கள் முன்னிலையிலே, நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மெளலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன் ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன் ? மெளலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார் ? மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பயந்தது ஏன் ? முகமூடி கிழிந்து விடும் என்றா ? இல்லை பின்னங்கால் பிடறியில் பட ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்றா ? பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன் ? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம் ? பி.ஜைனுலாபிதீன் மெளலிது பற்றிய விவாதத்தில் ஏன் பேச பயந்தார் என்று எந்த தவ்ஹீது ஜமாஅத்தினராவது அவரிடம் கேள்வி கேட்டார்களா ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனிடம் கேள்வி கேட்கும் துணிவுதான் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு உண்டா ?
விவாதத்தில் பேசாமல் மெளனம் சாதித்ததின் மூலம் “சுபுஹான மெளலிதில் தவறில்லை” என்று தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும். இதை விடுத்து பதில் சொல்லும் விதமாக சப்பைக்காரணங்களைக் கொடுத்தால் சுன்னத் ஜமாஅத்தினரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோசமான நிலைமை தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு ஏற்படும்.
வஸ்ஸலாம்.
Posted in Uncategorized | 6 Comments »
இந்தியா நம் நாடு:
இனக் கலவரங்களால்
பிணக் குவியல்களின் கண்காட்சி
புனித நதிகளோடும் இந்தியாவில்
குருதி நதிகள் குறுக்கிடுகின்றன…
பாலூட்ட வேண்டிய குழந்தைகளுக்கு
மதவெறி எனும் நஞ்ஞூட்டப் படுகின்றன…
மனசாட்சியைக் மறந்து மக்கள்
மாக்களாகி விட்டனர்…
கோயிலும் மசூதியும் மனிதத்தை
மதிப்பதற்க்காகத்தானே தவிர
மதவெறியை வளர்ப்பதற்கல்ல!
மாண்டவர்களின் பட்டியல்
நீண்டுவிடாமல் முற்றுப்புள்ளி இடுவோம்…
அனாதை குழந்தைகளின் அழுகுரல்
காதில் கடப்பாரையை பாய்ச்சுகின்றன…
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட
நம் நாட்டிலா…
இந்த அடுக்கடுக்கான கோரச்சம்பவங்கள்!
அன்பே சிவமென்று தெரிந்தும்
நமக்குள் எல்லைக்கோடென்ன?
ஒரேயொரு தாய்தந்தையிலிருந்து
பிறந்த நமக்குள் பாகப்பிரிவினையென்ன?
சாதிக்காக போராடுவதை நிறுத்தி
சாதிக்கப் போராடத் தொடங்குவோம்
ஒற்றுமைத் தாயின் மடியில்
என்றும் இளைப்பாற்வோம்…
பாவைப்பிரியன்
kmss@in.com
Posted in Uncategorized | Leave a Comment »
Posted in Uncategorized | Tagged Uncategorized | 1 Comment »
Posted in Uncategorized | Tagged Uncategorized | Leave a Comment »
Posted in Uncategorized | Tagged Uncategorized | Leave a Comment »
பத்திரகிரியார் பாடல்கள் – மெய்ஞ்ஞானப் புலம்பல்
காப்பு
முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்
நூல்
ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்
தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்
ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்
மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்
காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்
சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்
பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்
பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்
தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்
மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்
பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்
உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்
வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்
பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்
ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்
தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்
ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம்
அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்
தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்
தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்
எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்
அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்
அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம்
பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்
தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்
வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்
மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம்
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்
செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம்
கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்
ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்
நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்
பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக்
கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்
இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப்போட்டு உன்னைப் போற்றி நிற்பது எக்காலம்
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்
சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம்
காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம்
சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம்
தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம்
ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்
புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்
தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்
பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம்
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்
பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்
சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம்
மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல்
உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம்
தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம்
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்
எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம்
கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்
ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்
நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்
அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்
கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்
தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்
ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்
மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்
அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்
மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்
வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்
வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்
உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்
பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்
கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்
கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்
அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்
அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்
பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம்
தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்
புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம்
நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம்
நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
நானே வெளிப்படுத்தித் தருவன் என்பதும் எக்காலம்
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்
ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்
இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம்
அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்
கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
சுட்டுவிடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம்
தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்
காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்
ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்
இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம்
மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்
ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்
பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்
மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்
ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்
அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்
வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று
சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்
மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல்
கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம்
என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்
மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நில்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்
முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்
கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க
நினைவைப் பரவெளியில் நிறுத்துவது எக்காலம்
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்
நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்
முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய்
அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம்
சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம்
வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்
எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்
அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்
நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்
என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்
ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்
ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்
காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்
பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்
ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்
ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்
கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்
தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்
பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்
ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்
குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்
மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம்
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்
பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்
நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்
பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்
பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்
காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே
ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்
உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்
வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்
பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம்
அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்
ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்
பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்
ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்
பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்
ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்
ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்
என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்
இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்
மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்
என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம்
கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம்
நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம்
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்
கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்
அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல்
உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம்
நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்
இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்
கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம்
வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம்
கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்
இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல்
அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்
மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்
கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம்
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்
செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்
ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை
பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்
ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்
சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம்
நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம்
வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்
எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க்
கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்
உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம்
ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்
சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம்
சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்
போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம்
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்
அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்
நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்
நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம்
அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்
பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்
வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்
பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம்
நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம்
எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்
அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம்
பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம்
ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்
தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம்
என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம்
தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்
என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்
இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்
ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம்
முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்
கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்
நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்
உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்
ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்
ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்
காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு
மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம்
நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான
தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம்
எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்
உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம்
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம்
மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி
காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம்
ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து
நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்? 231
Posted in Uncategorized | Tagged Uncategorized | Leave a Comment »
|
|
|
புதுதில்லி: “தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது” என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் வந்து கலந்துக் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலம் தேவ்பந்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். “கலவரம், குழப்பம் உருவாக்குவதும் கொலை செய்வதும் இஸ்லாத்தில் மிகவும் வெறுக்கப்பட்டக் குற்றமாகும். மதப்பண்டிதர்கள் இஸ்லாமிய விரோத, தேச விரோதச் செயல்பாடுகளில் கவரப்படமாட்டார்கள். இஸ்லாம் அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கமாகும்.” என்று 150 வருடப் பாரம்பரியமுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா கல்வி நிலையத்தின் முக்கிய ஆசிரியரான மௌலானா மர்ஹூபுர் ரஹ்மான் கூறினார். “
திருமறை குர்ஆன், எல்லா சக உயிரினங்களுடனும் இணக்கத்துடன் வாழவே கட்டளையிடுகின்றது. மதரஸாக்களுக்குத் தீவிரவாதத்துடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. மதரஸாக்கள் நடைமுறை இஸ்லாமிய வாழ்க்கைப் பாடங்களைப் போதிக்கும் புனிதப் பள்ளிகளாகும். இவையல்லாது, இஸ்லாத்தின் மீதும் மதரஸாக்கள் மீதும் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவைகளாகும்” என மேலும் அவர் கூறினார். “
தீவிரவாதம் தொடர்புள்ள வழக்குகளைக் கையாளும் பொழுது அரசுகள் பல நேரங்களிலும் பாரபட்சத்துடன் செயல்படுகின்றன. ஆதிக்க சக்திகளின் துணையுடன் மதரஸாக்களைத் தீவிரவாதப் பரிசீலனைக் கூடங்களாகச் சமூகத்தின் முன்னிலையில் சித்தரிப்பதற்கான முயற்சிகள் முழு அறிவுடன் நடைபெறுகின்றன. ஆனால், இந்நாட்டில் செயலபடும் மதரஸாக்கள் அனைத்தும் மனிதத்தன்மை, சமாதானம், அன்பு போன்றவற்றினை ஒவ்வொருவருக்கும் அறிவித்துக் கொடுக்கும் கூடங்களாகவே செயல்படுகின்றன” என மௌலானா அறிவித்தார் |
Posted in Uncategorized | Tagged Uncategorized | Leave a Comment »
ஞானரத்தினக் குறவஞ்சி
************************************
1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.”
ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்
ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?
அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே
இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!
2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா”
ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் விந்துவேயாம் .
3.”சோதியி லாதி சொரூபமான தெப்படி சிங்கி? – அது
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா!”
அதுஎப்படி ஆதி சொரூபமானது சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளும் ஒன்றாய்ச் சேர்ந்த ஆன்மாவைப்
படைக்கும். ஆன்மா வேதமாம் அறிவை அடையும்.
4.”முப்பொரு ளென்று நீமுன் சொன்ன தாரடி சிங்கி? – அவர
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா!”
முப்பொருளென்று முன்னே சொன்னது யாரடி சிங்கி?
பதி,பசு,பாசம் கூடிய அப்பனும், ஆயியும் ஆயிரம் உயிருக்கு ஆதியாம் நாம்
தானடா சிங்கா.
5.”எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி? – அது
அப்பன் தன் னட்புக்கு ஒப்பியதாலே சிங்கா!”
எப்படி உலகில் இப்படி உருவானோம் சிங்கி?
அப்பனும் ஆயியும் நட்பினால் இணைவவதற்கு ஒப்பியதாலே சிங்கா.
6.”பராப ரத்தினிற் பஞ்சவ னமேது சிங்கி? – அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா!”
இந்த உலகினில் ஐந்து வர்ணம்எது சிங்கி?
அது வேராகி, தூரான, ஆதியான விந்துவின் நிறமடா சிங்கா.
7.”ஒன்றுக்குள் ஐவர் உண்டான தெப்படி சிங்கி? – அது
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா.”
ஒரு உடலினுள் ஐம்பூதங்கள் உண்டானது எப்படி சிங்கி?
அவைகள் ஒன்றோடு ஒன்றாக ஓடி இணைந்ததால்தான் உருவாகிய ஒன்று
உடலானது சிங்கா.
8.”மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி? – அது
நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!”
ஐம்பூதங்களையும் அடக்கி விந்து நாதத்தில்ஏற்றினால் அதுதான் மூல(கபால)க் குகைக்குள்எரியும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளல்ஏற்படும் முச்சுடரே
9.”மூலக்கிழங்கு முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
நாதத்திலான நடுநிலையல்லவோ சிங்கா!”
மூலக் கிழங்கு (விந்து) முளைக்குமிடம் எங்கே சிங்கி?
அது விந்து நாதத்தின் நடு(ப்பகுதி) நிலை அல்லவோ சிங்கா. அதுவே
கபாலத்தின் நடுப் பகுதி. ஐம்புலன்களிருந்தும் உள்புறமாகக் கோடுகள்
வரைந்தால் அது உள்நாக்குப் பக்கத்தில் வெட்டும். அந்த இடம்தான் சிங்கா.
10.”மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார்சிங்கி? – அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினவடா சிங்கா!”
கபாலக் குகையெனும் மூலக்குகைக்கு அரசர் யாரடி சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்றாய் இணைந்து முடிந்த
“நினைவு” தான் அது சிங்கா.
11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!”
முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?
மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும்
கண்களடா சிங்கா.
12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!”
உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?
பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா
(தலமடா) சிங்கா.
13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!”
இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?
இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.
14.”இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?
அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா
சிங்கா.
இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது
பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின்
தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான்
குழவிக்கு உயிர்.
இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.
15.”இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? – அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?
அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும்
கொடி அல்லவோ சிங்கா.
16.”இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? – அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!”
என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?
இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.
17.”மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என்ன
சொன்னார் சிங்கி?
கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.
“மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
இதை “மட்டிலடங்காத மா “கலிமா” வடா சிங்கா!”எனக் கூறுவோரும்
உண்டு.
கலிமா :
“லா இலாஹ இல்லல்லாஹூ – முஹம்மதுர் ரஸுலுல்லாஹி.”
18.”எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? – அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!”
எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?
அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்
தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.
19.”முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? – அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!”
அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?
சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர்
ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.
20.”பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? – அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!”
அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?
பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.
21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!”
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர்,
மண் ஆகியவைதானடா சிங்கா!”
22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!”
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது
(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா
சிங்கா.
23.”தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!”
தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?
கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா
சிங்கா.
24.”என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? – அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!”
தன்னையறிவது எப்படி சிங்கி?
தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது
சிங்கா.
25.”இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? – அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!”
இறையை அறிவது எப்படி சிங்கி?
இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!
26.”என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? – அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!”
தவம் என்றால் என்னடி சிங்கி?
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும்
மறந்து இருப்பதுதான் தவம்.
27.”என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? – அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!”
தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?
நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம்
தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.
28.”என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? – அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!”
ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?
எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.
29.”ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? – அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!”
ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?
உயர்நிலை நினைவுதானடா சிங்கா.
30.”கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? – சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!”
வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?
அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?
அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?
அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா!
(கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!
ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?
அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே
சிங்கா!
34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? – அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!
ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?
தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!
35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? – அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!
கதி = பிறப்பு; மதி = அறிவு.
இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?
அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!
Posted in Uncategorized | Tagged அல்லாஹ் | Leave a Comment »
___00000000________________
__000000000000____0000000___
_00000000000000__0000000000_
_00000000000000_00000000000_
__0000000000000000000000000_
____000000000000000000000___
______00000000000000000_____
________0000000000000_______
__________000000000_________
____________000000__________
_____________0000___________
___________________________________$$$$$$$
_________________________________$$$$$$$$$
_________________________________$$$___$
_________________________$$$____$$$$
_______________________$$$$$$$__$$$$$$$$$$$
_____________________$$$$$$$$$___$$$$$$$$$$$
_____________________$$$___$______$$$$$$$$$$
______________$$$$__$$$$_________________$$$
___________$__$$$$__$$$$$$$$$$$_____$____$$$
________$$$___$$$$___$$$$$$$$$$$__$$$$__$$$$
_______$$$$___$$$$$___$$$$$$$$$$__$$$$$$$$$
__$____$$$_____$$$$__________$$$___$$$$$$$
$$$$__$$$$_____$$$$_____$____$$$_____$
$$$$__$$$_______$$$$__$$$$$$$$$$
_$$$$$$$$$______$$$$__$$$$$$$$$
_$$$$$$$$$$_____$$$$___$$$$$$
_$$$$$$$$$$$_____$$$
__$$$$$$$$$$$____$$$$
__$$$$$__$$$$$___$$$
__$$$$$___$$$$$$
__$$$$$____$$$
___$$$$
___$$$$
_000000___00000___*
00000000_0000000___*
0000000000000000____*
_00000000000000_____*
___00000000000_____*
______00000_______*
________0________*
________*__000000___00000
_______*__00000000_0000000
______*___0000000000000000
______*____00000000000000
______*______00000000000
_______*________00000
________*_________0
_________*________*
___________________*
____________________*
____________________*
___________________*
00000_00000___________________________
___000_____0_0____000__000____0000000_
___000____0___0___0000000_____00000___
___000___0000000__00__000_____000_____
____00___0_____0__000__0000___0000000_
______________________________________
______________________________________
___00000_____0_____0000000___000000___
_00_________0_0____000__000__000______
_00________0___0___0000000___00000____
_00_______0000000__00__000___000______
___00000__0______0_000__0000_000000
____________________________________________________
_*@@@*_____*@@@*_*@@@@@@*_@@@@@@*_*@@@@*______*@@@@* ____@@______@@______@@____@@________@@__________@@
______@@____@@______@@____@@________@@__*@@@@*__@@
________@@__@@______@@____@@@@@*____@@____@@____@@
__________@ @_______@@____@@________@@____@@____@@
_________*@@@@___*@@@@@@*_@@@@@@@__-_@@@@@@@@@@@@
Posted in Uncategorized | Tagged Uncategorized | Leave a Comment »
































