| Sura Al-Fatiha (1 – 7) |
|
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (1:1) |
|
الرَّحْمـنِ الرَّحِيمِ (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (1:2) |
|
مَـالِكِ يَوْمِ الدِّينِ (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (1:3) |
|
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4) |
|
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (1:5) |
|
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (1:6) |
|
غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (1:7) |