இளம் வயதில்
அம்மாவிடம் அழுதுபுரண்டு
காசு வாங்கி தம்பியோடு
ஏசு வாங்கி கடைக்கு சென்று
கடலை முட்டாய் வாங்கி
காக்காய் கடி கடித்த நியாபகம்!!!!
செல்லாத இந்த காசுகள்
சொல்லாத செய்திகள் எத்தனையோ?
நில்லாது செல்லும் வாழ்கையில்
நினைவுகள் மட்டும் (சில்லறை)
காசுகளை போல “கொள்ளென”
சிரிக்கின்றன..
நான் மட்டும் அழுகின்றேன்
மீண்டும் கடைக்கு போவலாம் என்று……
கண்ணீருடன் பாவைபிரியன்..
Advertisement