உங்கள் நண்பனைப் பற்றி
அனைத்து நல்ல உள்ளங்களையும் எனது இணையதளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன். என் பெயர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போரட்ட வீரருமான அபுல் கலாம் ஆசாத் என்பதாகும்
நான் அழகான இந்தப் புவியின் வெளியான நாள் திசம்பர் பத்தொன்பது 1985 வியாழக் கிழமை காலை எட்டு மணி இருபது நிமிட நேரத்திலாகும். என்னடா இவன் இவ்வளவு பெரிய பீடிகை போடுகின்றானே என்று நினைக்க வேண்டாம். தங்கள் என்னைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்பதற்காகத்தான்.
செழிப்பான தஞ்சைமாவட்டம் பாபநாசத்தில் பிறந்த நான் நாகை மாவட்டம் பொறையாரில் டி.கே. என். துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், தவசுமுத்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் படித்து விட்டு மீண்டும் நான் பிறந்த ஊரான பாவைக்கே வந்து அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிப்பை முடித்து அங்கே கல்வி சரியில்லாத காரணத்தால் வழுத்தூர் சவ்கத்துல் இஸ்லாம் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் படித்து விட்டு அத்துடன் படிப்பை நிறுத்தி விடலாம் என நினைத்த வேளையில்…
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான் ஆயிரம் மதிப்பெண் பெற்ற காரணத்தால் திருச்சியில் உள்ள ஐமான்(இந்திய முஸ்லிம் அசோசியேசன்) இடம் கல்வி உதவித் தொகையாக வருடத்திற்கு ஆறாயிரம் பெற்று மீதி இரண்டாயிரத்தை வருடம் தவறாமல் மூன்று வருடமும் கல்விக் கட்டணம் ஆயிரம் சேர்த்து என் கல்வி உயர்விற்கு காரணமான என் சிறிய தந்தை மரியாதைக்குரிய நிஜாமுத்தீன் அவர்களிடம் பெற்று படித்து வந்தேன். அந்த நேரங்களில் என் அருமைத் தந்தை திரு சிராஜுத்தீன் அவர்களுக்கு கை உடைந்து விட்டதால் சாதாரண சுண்ணாம்பு அடித்து குடும்பம் ஓட்டி வந்த எங்கள் குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது. என் சிறிய தந்தை பண உதவி செய்த போதிலும் தனியார் கல்லூரியான ராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்த நான் அடிக்கடி பணம் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானேன். அவ்வப்போது படிக்கும் நேரங்கள் தவிர பலகடகளில் வேலை பார்து அதன் மூலம் வரும் வரும்மனத்தைக் கொண்டு படிப்பிற்கும் என் குடும்ப செலவிற்க்கும் உபயோகப் படித்திக் கொள்வேன்.
எப்படி இருந்த போதிலும் நான் உழைத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக என் தந்தையும் அவரைத் தொடர்ந்து என் அருமை தம்பி முகம்மது காசிமும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தார்கள். என் தம்பி பத்தாம் வகுப்பு முடிந்தவுடனே விளையாட வேண்டிய அந்த சிறுபிராயத்தில் எங்களுக்காக உழைக்கத் தயாரானான். அவனுக்கு காலதிற்க்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
அதன் பின் இளங்கலைப் பட்டத்தோடு நிறுத்தி விடாதே என்று கூறிய என் சிறிய தந்தை முதுகலை வணிகவியல் படிக்க முழு உதவிகளையும் செய்து கொடுத்தார்கள். என் தந்தை அடிக்கடி எனக்கு நினைவு படுத்துவார் நான் படிக்காததால்தான் இன்று துன்பப் படுகின்றோம். நீ நன்றாக படித்து நாம் பட்ட துயரங்களையெல்லாம் தூர எறிய வேண்டும். அவர் சொன்ன வார்த்தைகளை மந்திரங்கள் போல் நினைவுப்படுத்தி கல்வியில் முதல் வகுப்பில் தேர்வு பெற்று ஒரு வருடம் வேலை சிறுகசிறுக செய்து பிறகு வழக்கம் போல் கொடுத்தே பழகிய இரக்கமனதோன் என் சிறிய தந்தை உதவியால் சவூதி அரேபியாவில் அல்ஜுபைல் என்னுமிடத்தில் போதுமான அளவு ஊதியத்தில் ஆனந்தமாக பணிபுரிந்து வருகிறேன். என் குடும்பமும் வறுமை தீர்ந்து இனிதாக இருக்கிறது.
இத்தளத்தின் நோக்கம்:
அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழவும், ஜாதிமத பேதத்தால் வரும் கலவரங்களை நம்மால் முடிந்தவரை ஒழிக்கப் பாடுபட வேண்டுவதற்காகவும் உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்த்து ஆரம்பம் செய்திருக்கிறேன். மேலும் இஸ்லாமிய சமுதாயத்தின் சிறந்த கருத்துக்களையும், சமுதாயத் தொகுப்புகளையும் இதில் வெளியிடுகிறேன்.
தனிமரம் தோப்பாகாது என்பதை முழுதாய் புரிந்தவனாதலால் தங்களும் என்னுடைய தளத்தில் ஏதும் கட்டுரைகள் வெளியிட விரும்பினால் பின்னூட்டத்தின் மூலமாக அனுப்புமாரு கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரைகள் சமுதாய ஒற்றுமை மற்றும் தாக்கங்களை குறித்ததாக இருத்தல் அவசியம்
இதன் மூலம் அனைத்து சமுதாய மக்களிடத்திலும் ஒற்றுமையும், அன்பும் மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை.
மனிதனை மனிதனாய் பார்ப்போம்
மானுடத்தின் மகத்துவம் போற்றுவோம்.
என்றும் பிரியாதவனாய் உங்கள்
பாவைப் பிரியன்.
